உன்னுள் உயிராழத்தில்
புதைந்து இருக்கும்
ஞானப் புதையலை
அகழ்ந்து எடுப்பதற்கு
தவமே தோண்டியாம்!
முயற்சி தளராமல்
தினம்தினம் அகழ்ந்தால்
என்றாவது ஒருநாள்
ஞானம் அடையலாம்!
கால நீளத்தால்
அயர்ச்சி அடைந்தாலும்
முயற்சி விடாததால்
ஞானம் பெற்றார்
கௌதம புத்தர்!
உடற் காமமும்
உளக் குரோதமும்
இடையில் தடுக்கும்
கடும் பாறைகளாம்!
அகத்தாய்வு எனும்
கடப்பாறை கொண்டே
இடித்து முன்னேறு!
தோண்டும் காலத்தில்
உள்ளத்தில் தூய்மையும்
உடலில் வலிவும்
முழுமை வேண்டும்!
நம்மாசான் வேதாத்திரி
அன்புடன் தந்திட்ட
உடற்பயிற்சி காயகல்பம்
தேறவும் வேண்டும்!
உடல், மனம்
ஞான இடிதாங்கிகளாக
மாறவும் வேண்டும்!
உந்தன் முயற்சியாலும்
வித்தின் பதிவினாலும்
குருவின் திருவருளாலும்
காலத்தே நீயும்
ஞானத்தை அடையலாம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!
மாங்கொட்டை விதைத்தால் மாமரம் தான் வரும்! மாம்பழம் தான் கிடைக்கும்!பலாக்கொட்டை விதைத்தால் பலாமரம் தான் வரும்! பலாப்பழம் தான் கிடைக்கும்! வேதாத்திரிய விதை விதைத்தால் வேறென்ன வரும்! ஞானப்பழம் தான் கிடைக்கும்!
உடற்பயிற்சியால் உரமேற்றப்பட்ட உடலெனும் நிலத்தில் ஊன்றப்பட்ட வேதாத்திரிய விதையை, அறுகுணங்கள் அரித்து விடாமல் அகத்தாய்வு செய்து, தினம் தினம் தவமெனும் நீரூற்றினால், குருவெனும் சூரிய ஒளியில், அது செடியாகி, மரமாகி, பூவாகி, காயாகி நிச்சயம் ஒருநாள் ஞானப்பழம் தரும்!
ஞானியர்கள் தவம் செய்தே ஞானம் அடைந்துள்ளனர், அல்லது ஞானியராய் பிறந்தாலும் பெரும்பாலோர் தங்கள் தொடர் தவத்தாலேயே பிரம்மஞானத்தை விரிவுபடுத்திக் கொண்டனர். உலகத்தொண்டு நோக்கம் கொண்டு பெற்ற ஞானத்தால் இவ்வுலகும் நற்பயன் பெற்றது. தம்மை நாடியோர்க்கும் தவத்தையே கற்றுக் கொடுக்கின்றனர்.
பேரண்ட ஞானமும், பேரானந்தமும் நல்கும் தவமே இப்பூவுலகின் உயர்ந்த கல்வியாகும்! அப்பேறு பெற்ற பின் வேறென்ன வேண்டும் நமக்கு? குரு காட்டும் தவமுறையில் தினம்தினம் உறைந்தால் அருளகமெனும் கருவறையில் ஞானம் பூக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
முயற்சி தளராமல்
தினம்தினம் தியானித்தால்
என்றாவது ஒருநாள்
ஞானம் அடையலாம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
-- ரவிஒளிமதி...
பேரறிவான இயற்கை என்னும் பேராற்றல்,
யார் ஒருவர், தனது மன அலையை,
மிக நுண்ணிய அளவிலே
ஒழுங்கு படுத்திக் கொள்கிறாரோ,
அவர் மூலமாக உண்மை பொருளைப் பற்றிய
எல்லா ரகசியங்களையும் வெளிபடுத்துகிறது.
-வேதாத்திரி மகரிஷி (ஜீவகாந்தம்)
பேரறிவான இயற்கை என்னும் பேராற்றல்,
யார் ஒருவர், தனது மன அலையை,
மிக நுண்ணிய அளவிலே
ஒழுங்கு படுத்திக் கொள்கிறாரோ,
அவர் மூலமாக உண்மை பொருளைப் பற்றிய
எல்லா ரகசியங்களையும் வெளிபடுத்துகிறது.
-வேதாத்திரி மகரிஷி (ஜீவகாந்தம்)
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியிலான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தர சோதியுந் தோன்றிடுந் தானே!
- திருமூலர் (திருமந்திரம் 619)
REVELATION
-Vethathiri Maharishi (Anboli - July 1994)
REVELATION
Through practice of inner travel (meditation), if one
1) Bring the mind to beyond alpha wave (very subtle
frequency) and maintain awareness at the same time
2) Getting detached from worldly things of sensual
experiences and surrenders himself to supreme state of consciousness (the
infinite)
all the secrets of the Universe
will be revealed to him according to the need and time of the human society.
A man of psychic culture who
develops a state of mind to be natural and divine justice beyond all kinds of
prejudices, will easily and often get such revelations.
When a man surrenders ego and
conditionings derived there from to the Total Consciousness, the cosmic waves
reveals the facts of Nature, its mysteries and secrets only to conventional
human mind.
Many such Revelations are not
verifiable by scientific methods and mathematical calculations but will always
remain as an esoteric inner empiricism beyond all conventional sciences.