welcome to the secret world of spiritual enlightenment

OUR GURUJI

OUR GURUJI
Vethathiri Maharishi

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தவம் செய விரும்பு !











8. a ray of hope



Guruvey Thunai!
vazhga Vaiyagam!
Vazhga valamudan!

வாழ்க வளமுடன்!


EINSTEIN'S LETTER TO U.S.PRESIDENT ROOSVELT IN 1939.
“ In the course of the last four months it has been made probable – through the work of Joliot in France as well as Fermi and Szilard in America – that it may become possible to set up a nuclear chain reaction in a large mass of uranium, by which vast amounts of power and large quantities of new radium-like elements would be generated. Now it appears almost certain that this could be achieved in the immediate future. This new phenomenon would also lead to the construction of bombs, and it is conceivable – though much less certain – that extremely powerful bombs of a new type may thus be constructed.”

This led to the Manhattan Project and ultimately to the bombs that exploded over Hiroshima and Nagasaki in 1945.
(taken from the book “The Universe in a Nutshell” by Stephen Hawking, the present Scientist.)

ESSENCE OF THE DRAMA "ATOMIC POISON" OF VETHATHIRI MAHARISHI IN 1957.
No country should conduct nuclear tests. All existing atomic weapons should be handed over to the U.N. for dismantling without danger to anyone. His introduction to the drama ends as “I herewith humbly request the leaders of all nations and all my readers to give your sincere and heartfelt consideration to the question of survival of the future generations of mankind”.

The forward given by former Director of CBI, D.R.Kaarthikeyan to that book in 2002 details the terrible facts and will not allow us to sleep peacefully.


TWO SPEECHES OF U.S.PRESIDENT BARACK OBAMA IN 2009
On Friday (April 3,2009), in Strasbourg, he was rapturously applauded by French and German students when he said he wanted to rid the world of nuclear weapons. In Prague on April 5, he spelled out his hopes, outlining a host of means to that end and denouncing fatalism in the face of the nuclear threat as a “deadly adversary.”

He said, “ the spread of nuclear knowhow and technology had to be stopped, since it would become increasingly easy to “buy, build or steal” a nuclear bomb. The risk of terrorists being able to obtain a nuclear device was “the most immediate and extreme threat to global security.”
(taken from “The Hindu” – April 07, 2009.)


NOBLE & NOBAL

Atlast, the 50 years before-forethought of our Swamiji reached the U.S.President. The above words reproduces our swamiji’s same words. It gives a ray of hope. The rapturous applause of students, the younger generation , shows that they are more brilliant than the world political leaders and scientists. This positive attitude in Obama has gifted him Nobal Prize now.

If the technology goes to the hands of terrorists that will be the end of human race in this planet earth as once dinosaurs were destroyed by nature itself. That will be the end result of the discovery of e = mc2 and the letter written in 1939 to Roosvelt. That is the difference between Scientists and Gnanis.

The tsunami that hit Japan on March 11, 2011 caused reactors in the atomic plants melt down and start emitting radiations in the surrounding earth, sea and atmosphere. Nuclear fission means when a neutron attacks uranium nucleus, the uranium nucleus splits into 2 other nuclei and also emits one or more neutrons, that emitted new neutrons attacking the other uranium nuclei and multiplying like this, thus producing a lot of energy and heat. Here water is the cooling moderator, and as happened in Japan, if the reactors are damaged by earthquake or tsunami, nobody can stop the melt down of nuclear reactors and spreading of dangerous radiation emissions on earth. It is like another nuclear bomb attack. It is a big caution to humanity to stop playing at sub-atomic level. Here nature itself reacts from reactors.

What we have in store for our next generation?. Nuclear threats, Global warming, pollution, decreasing availability of pure drinking water, Chemically fertilized grains & vegetables, adulterated food, terrorist attacks, enmity between each other in the name of religion, caste, race etc., the increasing number of broken marriages, increasing number of elders homes, corruption, misuses, selfishness etc. Media is also doing it’s best in polluting the minds by directly showing and indirectly sowing hatred and lust. TV serials are imparting violence inside family and relations.

On the other hand, nowadays, we can see a lot of yoga centers appearing here and there. People start realizing the need of the hour. This also gives a ray of hope. Only yogic minds like us can save the world that reflects the ever-increasing fragmentation of the mind. A coconut tree even if it stands in a sewage and drainage path will have pure water inside it’s coconut. Like wise the yogic mind will be pure in this insanely complex world of continuous problems and conflicts. That is the purpose of Gnanis coming to this earth now and then. That is the purpose for so much vethathiria seeds sown by our Guruji. What else than the following manthra that is being uttered daily by lakhs of meditating souls can save the world?

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!

It is our duty to spread our Guruji’s teachings to as many people as possible to make it possible to handover this beautiful world in a peacefully livable condition to our future generations.

Vazhga Valamudan!
Vazhga Vaiyagam!

-- in the path of Guruji,
 -- Raviyolimathi Avudaiappan.

I present here a research paper that was presented by me at a seminar at NGM College, Pollachi.



உலக சமாதானம் பெற மனவளக்கலை

--- சு. ஆவுடையப்பன், ஆழியார்
(ஆய்வாளர்
, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் )
-----------------------------------------------------------------------------------------
முன்னுரை:

அன்று வாழ்ந்த ஐந்தறிவு உயிரினம் ஒரு இயற்கை விபத்தால் அழிந்தது. இன்று வாழும் ஆறறிவு உயிரினம், மெய்ஞ்ஞானம் அறியா விஞ்ஞானத்தால், தன்னையே முற்றிலும் அழிக்கத் தயாராகி விட்டது.ஏழாம் அறிவு பெற்று அழிவைத் தடுக்க முடியுமா? அதற்கான நம்பிக்கைகள்,வழிமுறைகள் உள்ளனவா?’ என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும் .
விஞ்ஞான விபரீதம் :

டைனோசர்கள் இந்த பூமியில் 26 கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றி, ஏதோ ஒரு பெரிய விண்கல் பூமியில் மோதியதால் சுமார் 6.5 கோடி வருடங்களுக்கு முன் அழிந்தன. அதற்குப் பிறகு பரிணாம வளர்ச்சியில் தோன்றிய பெரிய நாகரீகம் மனித இனம் எனும் ஆறறிவு உயிரினம் ஆகும். அது விளைவறியா விஞ்ஞானத்தால் தன்னை தானே அழித்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆறாவது அறிவின் முதிர்ச்சியால் விண்கலங்கள், நோய் தீர்க்கும் மருந்துகள், தொலைத்தொடர்பு ஒலி, ஒளிக் கருவிகள், சோதனைக் குழாய் குழந்தைகள், குளோனிங் தொழில்நுட்பம், ஜீன்களையே திருத்தும் ஆராய்ச்சிகள், கணினி, செல்போன், இணையதளம் என்று அளப்பரிய அற்புதங்களைக் கண்டுபிடித்து விட்டார்கள். செவ்வாய் கிரகத்திலும் இயந்திரத்தை பூமியிலிருந்து இயக்குகிறார்கள். அது எடுத்து அனுப்பும் படங்கள் வெட்ட வெளியில் பல கோடி மைல்கள் தாண்டி மின்காந்த அலைகளாக நம்மை வந்தடைகிறது. ஆச்சரியமூட்டும் அறிவின் வளர்ச்சி.

ஆனால் இவ்வளவும் கண்டுபிடித்த ஆறாம் அறிவு, அணுகுண்டு எனும் அதி பயங்கர ஆயுதத்தையும் கண்டுபிடித்துவிட்டது. மதம், இனம், நாடு என்று குழு உணர்வுகளை வளர்த்துக் கொண்டு, இன்று நம்மை நாமே அழிக்க அணுகுண்டுகள் தயார் பண்ணிவிட்டோம். இன்று உலகில் இருப்பில் இருக்கும் குண்டுகள் இந்த உலகையே 2௦௦ முறை ஒரு புல் பூண்டு கூட இல்லாமல் அழிக்க வல்லவையாம். இந்த நிலையில் நாம் இவ்வுலகில் பத்திரமாக இருப்பதாக நினைத்தால் அது அறியாமையே. உலகின் மிக உயர்ந்த அறிவுடைய நாகரீகமான மனித இனம் தம்மைத் தாமே அழித்துக் கொண்டன!என்று எதிர்கால உயிரினங்கள் அல்லது வேற்று கிரக உயிரினங்கள் நம் வரலாற்றைச் சொல்லும் நிலை வர வேண்டுமா? நம் சந்ததிகள் கையில் நம் பூமியை பத்திரமாக நாம் கொடுக்க வேண்டாமா?

இது தான் பின்விளைவறியா விஞ்ஞானிகளுக்கும், புவிநலன் காக்க தோன்றும் மெஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசம்! விஞ்ஞானம் என்பது உலகம் பற்றி புரிந்து கொள்வது. மெய்ஞ்ஞானம் என்பது அதையும் தாண்டி மனம், உயிர், இறைநிலை பற்றி அறிந்து கொள்வது. ஆன்மீகம் தவிர்க்கும் அறிவியல், உலகை மொத்தமாக அழிக்க ஆயுதங்கள் செய்து விடும் என்று எச்சரிக்கிறார் வேதாத்திரி மகரிஷி.


மனித மனம் :

இன்று மனித மனம் பலவாறு பிளவுபட்டுக் கிடக்கிறது. இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகி, பொதுவாக சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்கு துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே! இந்த எண்ணங்கள் வான்காந்ததில் பரவப் பரவ அவை புயல், பூகம்பம், சுனாமி, வெள்ளம், எரிமலை, மழையின்மை போன்ற இயற்கை சீற்றங்களாக மாறி, அல்லது உலகப் போர்கள்,தீவிரவாத தாக்குதல்கள்,கொள்ளை நோய்கள் ஏற்பட்டு பல உயிர்களை பாதிக்கும்.

போரில் கை, கால் உறுப்புகளை இழந்து துடிக்கும் மனிதர்களை பார்த்து சும்மா இருக்க, நாம் ஒன்றும் நடந்து செல்லும் பிணங்கள் அல்ல என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி சொல்கிறார். படை வீரன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக, தன் குடும்ப பொருளாதாரத்தை காப்பாற்ற, போருக்குச் செல்கிறான். எதிரி நாட்டு வீரன் என்ன ஜென்ம விரோதியா? முன்னே பின்னே பார்த்திருக்கவே மாட்டான். ஆனால் ஹிட்லர் எனும் ஒரு தனி மனிதனின் மனதில் இருந்த கொலை வெறிக்கும், மண் ஆசைக்கும் எத்தனை லட்சம் உயிர்கள் மடிந்தன?

இன்று நம் இளைஞர்கள் எந்தெந்த நாட்டிலோ வேலை பார்க்கிறார்கள். உலகம் சுருங்கி விட்டது. இன்னும் ஏன் போண்டா சுட்டு வைப்பதை போல அணு குண்டுகளை தயாரித்து அடுக்கிக் கொண்டே போகிறார்கள். யாரை அழிக்க யார்?. அணு ஆயுதப் போர், சம்பந்தப்பட்ட 2 நாடுகளிலும் பல நகரங்களை அழித்து விடும் என்ற உண்மை தலைவர்களுக்குத் தெரியாத என்ன? ஆனால் அதன் தாக்கம் இப்புவி முழுவதும் அனைத்து உயிரினங்களையும் வெகுவாக பாதிக்கும். அந்த உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?

அணு விஷம் :

நமது உடற்ச்செல்களின் அடிப்படையான அணுக்கள் ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன்,கார்பன் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை மட்டுமே. உடல் இயக்கத்துக்கு சோடியம், பொட்டாசியம், குளோரைடு, மெக்னிசியம் போன்ற அணுக்களும் தேவை. அவ்வளவு தான். இவற்றின் அணுக்கருக்களில் புரோட்டான்களின் எண்ணிக்கை வெறும் இருபதுக்குள் தான். ஆனால் யூரேனியத்தில் 92, நெப்ட்யூனியத்தில் 93,ப்ளூட்டோனியத்தில் 94. இயற்கையாக உலகில் காணப்படும் அணுக்களில் மிக அதிக அணு எடை மற்றும் அணு அடர்த்தி உள்ளவை இவை தான். எனவே தான் அணுக்கதிர் இயக்கம் இவற்றில் சாத்தியப்பட்டது.

நெப்ட்யூனியம் மிகக் குறைந்த அளவே பூமியில் கிடைப்பதால்,அதனை விடுத்து மற்ற இரண்டிலும் நியூக்ளியர் குண்டுகள் தயாரித்து, தலா ஒன்று, ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் போட்டு விட்டார்கள். முறையே 200000,140000 மக்கள் உடனே காலி. 1500 மைல் வேகத்துடன் வீசிய பலநூறு சென்டிகிரேட் வெப்ப தீக்காற்று, தோலை, சதையை எல்லாம் உடனே உருக்கி விட்டது. தூரத்தில் இருந்த மற்றவர்களுக்கும் வாழ்நாள் முழுதும் வேதனை, சந்ததிகளுக்கும் வாழ்நாள் முழுதும் சோதனை.

பூமியில் யுரேனியம் ஏராளம். ப்ளூட்டோனியம் இன்று 1000 டன் எடை கையிருப்பில் உள்ளது. ஒரு குண்டு செய்ய சில பவுண்டுகள் போதும். இது மட்டுமே இன்னும் 250000 ஆண்டுகள் உலக ஜீவராசிகளுக்கு ஆபத்து தருபவையாம். அன்று வெடித்ததை விட இன்று பல மடங்கு சக்தி வாய்ந்த ஸ்மார்ட்அணுகுண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். இன்று உலகில் சுமார் 30000 அணுகுண்டுகள் 9 நாடுகளில் உள்ளன. குறிப்பாக ஐ.நா சபையில் வீட்டோ பவருடன் இருக்கும் 5 வல்லரசுகள், அணு ஆயுதங்களை வெகுவாக குவித்து வருகின்றன. அவற்றில் பல நூலிழை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்சார அல்லது கணினி கோளாறினால் கூட ஏவுகணைகள் பாய்ந்து விடும் ஆபத்து உள்ளது.

பல குண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்தால், அவற்றால் எழும் தூசுப்படலம் பூமி முழுவதும் சுற்றிப்படர்ந்து, சூரிய ஒளியை முழுதும் மறைத்து, அணுக்குளிர் காலம் ஏற்பட்டு, அனைத்து ஜீவராசிகளும் உறைந்து போய்,டைனோசர் அழிந்தது போல் அழிந்து விடும். தீவிரவாதிகள் கையில் கிடைத்தால், பயமுறுத்தியே உலகை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அவற்றை இருக்கும் இடத்திலேயே வெடிக்க வைக்க ரிமோட்செய்து விட்டார்கள் என்றால் என்னாகும்?’ என்று வேதாத்திரி மகரிஷி வினவுகிறர்.

செர்நோபில், புகுஷிமா என்று அணு உலை விபத்துக்களே நம்மை பல நூறு மைல் தூரத்துக்கு அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன. உலக நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை அழிப்பதாக இன்று முடிவெடுத்தால் கூட, அத்தனையையும் கதிரியக்க பாதிப்பின்றி அழிக்க விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

புரியாத புதிர்கள்:

இந்நிலையில் நமக்கு புரியாத கேள்விகள் சில எழுகின்றன.   
 ஆண்டவன்,
1. மற்ற உயிரினங்களை கொன்று தின்று பிழைக்கும் மிருகங்களை ஏன் படைத்தான்? அதன் பரிணாம வளர்ச்சியாக மிருகக் குணங்களை உடையவனாக மனிதனை ஏன் படைத்தான்?
2. கதிரியக்க அணுக்களை ஏன் படைத்தான்?
3. அதை வைத்து அணு குண்டுகளை தயாரிக்கும் விஞ்ஞானிகளை ஏன் படைத்தான்?
4. நம் விதி அவ்வளவு தானா? இல்லை உலகை காப்பாற்ற ஏதாவது ஏழாம் அல்லது அதற்கும் மேலான அறிவை யாருக்காவது தருவானா?

முதல் மூன்றுக்கும் விடை தெரியா விட்டாலும், நான்காம் கேள்விக்கு விடை தேடிய இவ்வாராய்ச்சியில் கிடைத்த வழி முறையை இனி காண்போம்.

உலகம் காக்கப்பட - தியானம் தரும் ஞானம் :

ஒரு டப்பாவில் சிறிது தானியங்கள் அல்லது விதைகள் போட்டு சிறிது நீர் தெளித்து, லேசாக மூடி வைத்து விட்டு, சில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதில் புழுக்கள் வந்திருக்கும். மூடிய டப்பாவில் புழு எப்படி, எங்கிருந்து வந்தது? சில நாட்களில் அந்த புழுக்களுக்கு சிறிய இறக்கைகள் முளைத்து பூச்சிகளாக டப்பாவை விட்டு வெளியே பறக்கவும் ஆரம்பிக்கும். இதிலிருந்து தெரிவது ஒரு விதையை காலத்தில் முளைக்க விடாவிட்டால், அதிலுள்ள உயிர்சக்தி அசையும் உயிராக, புழுவாக மாறி, மற்ற விதைகளை சாப்பிட ஆரம்பிக்கும். அதாவது தொடு உணர்வு எனும் ஓரறிவு மட்டும் உள்ள தாவரம், சுவை உணர வாய் உள்ள ஈரறிவு புழுவாக மாறி, பின் வாசனை உணர மூக்கு உள்ள மூன்றறிவு பூச்சியாக பறக்க ஆரம்பிக்கும்.

உயிரின பரிணாமத்தில், அடுத்தடுத்த அறிவுகளான, பார்க்கும் திறன், கேட்கும் திறன், சிந்திக்கும் திறன் வந்ததும் இப்படித் தான் என்று வேதாத்திரி மகிரிஷி அவர்கள் சொல்லுகிறார்கள். இதிலிருந்து தெரிவது ஏதாவது அறிவை ஒடுக்கி வைத்தால் அடுத்த அறிவாக அது பிறப்பெடுக்கும் என்பதே! இதே போன்று மனிதன் தியானத்தால் தனக்கு ஆறு அறிவு தரும் ஆறு புலன்களையும் ஒடுக்கி, அதாவது தியானத்தில் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தால், அங்கு ஏழாம் அறிவான ஞானம் பூக்கும் என்பது தெளிவாகிறது.   

புத்தர் முதல் இன்றைய ஞானியர் வரை தவம் செய்தே ஞானம் பெற்றுள்ளனர். தியான நிலையில் மன அலை வேகம் வெகுவாக குறைந்து, இறுதியில் ஞான நிலைக்கு வரும். அந்த ஞான நிலையில் தான் இயற்கை ரகசியங்கள், உலகப் பேருண்மைகள் ஞானக் கருத்துக்களாக வெளிப்படும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. அப்படியென்றால், அவர் மனவளக்கலையாக கற்றுத் தரும், குண்டலினி யோக ஆழ்நிலை தியானத்தில் உலகை காப்பாற்றக் கூடிய ரகசியமும் ஒரு நாள் தெரிய வரும் தானே?

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிகாகோவில், சர்வ சமய மாநாட்டில் ஆற்றிய உலகப் பிரசித்தி பெற்ற உரையில், அவர் அமெரிக்க நாட்டு சகோதரர்களே, சகோதரிகளேஎன்று பேச்சை ஆரம்பித்தவுடன் எல்லோரும் கை தட்டினார்கள். அவர்கள் அவ்வளவு பரவசப்பட்டதற்கு, சகோதரத்துவத்தை அந்நிய நாட்டில் முதன் முதலாக வெளிப்படுத்தியது மட்டுமல்ல, தன்னிடம் உள்ள அதிசய ஆற்றலும் தான் காரணம் என்கிறார் அவர். ஒரு முறை கூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்தது இல்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற எண்ண ஆற்றல்கள் அனைத்தையும் ஒரு உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்ததுஎன்கிறார் அவர். தவத்திலும் நம் உயிரோட்ட பாதையை மேல் நோக்கி திருப்பி விடுகிறோம். அதனால் ஆன்ம பலம் கூடி உலக அமைதிக்கு நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் தானே?

தியானத்தின் வலிமையால் கிடைக்கும் மனோ சக்தியை சோதிக்க ஒரு முறை வேதாத்திரி மகரிஷி அன்பர்களிடம் சொன்னார். 'நான் இங்கு கோர்வையாக சில வாக்கியங்களை எழுதி வைத்துக் கொள்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் ஐ.நா.சபையில் பேசப் போகும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு, என் மனோ சக்தியின் மூலம் இதே சொற்றொடர்களை அனுப்பி வைக்கிறேன்' என்றார். அவர் அங்கு பேசியது இங்கு தாளில் எழுதப்பட்டிருந்தது நிரூபிக்கப்பட்டது வரலாறு. ஆகவே தியானியர்கள் பலர் சேர்ந்து முயற்சித்தால் அணு ஆயுத போருக்குத் தயாராகும் உலகத் தலைவர்கள் மனதை மாற்ற முடியும் தானே?

பிரபஞ்சத்தில் இருக்கும் ஈர்ப்பு சக்தி, விலக்கும் சக்தி எனும் சக்திகளே உயிர்களிடத்து முறையே காம, குரோதங்களாக வெளிப்படுகிறது என்று காஞ்சி மாமுனி தனது தெய்வத்தின் குரல்புத்தகத்தில் சொல்கிறார். ஒன்றிருந்தால் மற்றொன்றும் இருக்கத்தானே செய்யும்? அப்படியெனில் அது தவிர்க்க முடியாத ஒன்று தானோ என்ற முடிவிற்கு தள்ளப்படுகிறோம். இன்பம் இருந்தால் தானே துன்பம் இருக்கும். இரண்டும் இல்லையென்றால் அங்கு அமைதி தானே இருக்கும். ஆக உலக அமைதி வேண்டின் விருப்பு,வெறுப்பற்ற ஒரு நிலை வரவேண்டும். அது தவத்தில் மட்டும் தானே சாத்தியமாகும். தவத்தால் சித்திக்கும் பேரின்ப,பேரமைதி நிலையை வெகு ஜனங்கள் அடைந்தால் போர்கள் நின்று விடும் தானே?

தமிழ் நாட்டில் மழை சுமார் இரண்டு ஆண்டுகள் பொய்த்த பொழுது, வேதாத்திரி மகரிஷி ஆணைப்படி,அனைத்து மனவளக்கலை மன்றங்களிலும் ஒரே நேரத்தில் ஏப்ரல் 30, 2004ல், 7 மணிக்கு மழைத் தவம் இயற்றப்பட்டது. ஒன்றரை நாட்கள் கழிந்த பின் ஆரம்பித்த மழை, சுமார் ஒன்றரை மாத காலம் பரவலாகப் பெய்தது. இது இக்கட்டுரை ஆராச்சியாளர் நேரில் கண்டு அனுபவித்தது.

சூரிய ஒளியை குவியாடியால் ஒரு பேப்பரில் குவித்தால் அது தீப்பற்றிக் கொள்ளும். அது போல் தான் இங்கு மனோ சக்தியை ஒரு புள்ளியில் குவிக்கும் போது மன ஆற்றல் கூடுகிறது. அப்பொழுது எடுக்கும் சங்கல்பங்கள் நிறைவேறுகின்றன. கொடுக்கும் வாழ்த்துக்கள் பயன் தருகின்றன. இயற்கையே நம் சொல்படி கேட்கும் போது மனிதர்கள் மனத்தை மாற்றுவதா கஷ்டம்? எங்காவது போர் ஓய வேண்டுமென்று பல தியானியர் சேர்ந்து வாழ்த்தினால் அது நிறைவேறும். எனவே வேதாத்திரி மகரிஷி தந்த மனவளக்கலை உலகெங்கும் பரவப் பரவ, உலக அமைதி தொட்டு விடும் தூரந்தான். ஆனால் உலகம் அழியும் முன் விரைந்து பரப்ப வேண்டியது நம் இன்றைய தலையாய கடமை.

முடிவுரை :

விளைவறியா விஞ்ஞானத்தாலும், விருப்பு-வெறுப்பாலும், அறியாமையாலும் அழிவின் விளிம்புக்கு உலகத்தை கொண்டு வந்து விட்டோம். நம் சந்ததிகள் உலகில் வாழ வேண்டுமெனில், நாம் இனியும் தாமதிக்காமல், தியானம் தரும் ஞான வழிமுறைகளில் உலகை காப்பாற்றியே ஆக வேண்டும். அப்படிச் செய்தால் உலக சமாதானம் ஒரு நாள் வந்தே தீரும். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நோக்கீட்டு நூல்கள் :

1. அணு விஷம் - வேதாத்திரி மகரிஷி.
2. மனவளக்கலை - பாகம் 1 - வேதாத்திரி மகரிஷி
3. எனது வாழ்க்கை விளக்கம் - வேதாத்திரி மகரிஷி.
4. உயிரின்பம் - ரவியொளிமதி ஆவுடையப்பன்
5. தி ஹிந்து - தமிழ் நாளிதழ், ஏப்ரல் 16,2017
6. அன்பொளி - மாத இதழ் - ஜுலை 2004
7. Atomic Poison – ( By Vethathiri Maharishi)
                         --- Foreword – D.R.Kaarthikeyan